பிக்பாஸ் டைட்டில் வின்னர் உடன் ஜோடி சேரும் நடிகர் கருணாஸ்…!!! படத்தின் புதிய அப்டேட் இதோ.

karunas

நடிகர் கருணாஸ் காமெடி நடிகராக தொடங்கி கதாநாயகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர். நடிகர் கருணாஸ் சூரரைப்போற்று திரைப்படத்தில் அலப்பறை கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

தற்போது நடிகர் கருணாஸ் “ஆதார்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸில் புகழ்பெற்ற ரித்திகா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை கருணாஸ் நடித்த அம்பானி சமுத்திரம், ஜீவா நடித்த திருநாள் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராம்நாத் ஆதார் திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். மேலும் நடன இயக்குனராக ஸ்ரீதர் மாஸ்டர் பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் இன்று நிறைவு பெறுகிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது இந்த புகைப்படத்தில் கருணாஸ், ரித்திகா, ராம்நாத், அருண் பாண்டியன் ஆகியோர் உள்ளனர்.