மகன் கையால் திருமாங்கல்யம் பெற்று பேராசிரியை மறுமணம்…!!! திருமங்கலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்.

thirumangalam

திருமங்கலத்தில் கல்லூரி பேராசிரியை ஒருவர், மகன் கையால் எடுத்து கொடுத்த மாங்கல்யத்தை பெற்று மறுமணம் செய்து கொண்டார்.மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் ஓவியர் ஆதிஷ் திரைப்படத்துறையில் பணி புரிந்து வருகிறார். தென்காசியை சேர்ந்தவர் சுபாஷினி. கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறை பேராசிரியையாக உள்ளார்.

இவருக்கு திருமணமாகி, விவாகரத்து ஆகியுள்ளது. இவரது மகன் தர்ஷன் (9), ஆதிசும், சுபாஷினியும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து மாப்பிள்ளையின் சொந்த ஊரான மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.

இங்குள்ள பெருமாள் கோயிலில் உறவினர்கள் கலந்து கொண்ட இந்த திருமணத்தில் சுபாசிஷினியின் மகன் தர்ஷன் திருமாங்கல்யத்தை எடுத்து கொடுக்க மணமகன் ஆகிஷ், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.

தொடர்ந்து மாலை மாற்றி மெட்டி அணிந்து கொண்டார் மணமகள், பின்னர் தந்தை பெரியார் படத்தின் முன்பும் தம்பதியினர் மாலை மாற்றி கொண்டனர். இந்த திருமண வீடியோ, படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.