அமைச்சர் எல்லாம் ஆக முடியாது; புள்ளைய பெத்து போடத்தான் பெண்கள் என திமிராக பேசிய தலிபான்கள்…!!!

taliban

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள தாலிபான் தீவிரவாத அமைப்பு இடைக்கால அரசை அமைத்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 33 பேரும் தாலிபான்கள் தான். ஆரம்பத்தில் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி தருவோம். பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் தாலிபான்கள் வாக்குறுதி அளித்தனர்.

ஆனால் ஆட்சி அமைத்த பிறகு காற்றில் பறக்கிறது. ஆட்சியில் உரிமை கோரிய பெண்கள் அமைப்பினர் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்நிலையில் ஆப்கானில் 24 மணி நேர செய்தி சேனலான டோலோவுக்கு தாலிபான் செய்தி தொடர்பாளர் பேட்டி அளித்துள்ளார். அதில் தாலிபான்கள் அமைச்சரவையில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என செய்தியாளர் கேள்வி கேட்டதற்கு தாலிபான் செய்தி தொடர்பாளர் பெண்கள் அமைச்சராக முடியாது.

அவர்களால் அவ்வளவு பெரிய பொறுப்பை சுமக்க முடியாது. அமைச்சரவையில் இடம்பெற வேண்டிய அவசியமும் இல்லை. குழந்தைகளை பெற்றுக் கொடுப்பது தான் அவர்களின் ஒரே வேலை. மற்றபடி இங்கு போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் பெண்களுக்கு எல்லாம் அமைச்சரவையில் நிச்சயம் இடம் கிடைக்காது என்றார். திமிராக ஏற்கனவே பெண்கள் கிரிக்கெட் விளையாட நேற்று முன்தினம் தாலிபான்கள் தடை விதித்தனர். பெண்களின் போராட்டத்தை வீடியோ எடுத்ததாக இதுவரை 14 பத்திரிக்கையாளர்களே அவர்கள் அடித்து சித்தரவதை செய்துள்ளனர்.