மொபைல் ஸ்டாண்ட் பொருத்தி டிவி சீரியல் பார்த்தபடியே சென்ற இளைஞர்..!!! அலேக்காக தூக்கிய போலீசார்.

Bike

கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் டூவீலரில் சென்று கொண்டிருந்த ஒருவர் தனது மொபைல் போனை டூவீலரில் பொருத்திக் கொண்டு டிவி சீரியல் பார்த்துக் கொண்டு வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அதனைப் பார்த்த மற்றொரு வாகன ஓட்டி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது. அந்த மோட்டார் பைக்கின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் கண்ணப்பன் நகரை சேர்ந்த முத்துசாமி என்பதும் தனியார் மசாலா நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது வாகனத்தை இயக்கும் போது செல்போன் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அத்துடன் ரூ.1,200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவருடைய வாகனத்தில் அமைக்கப்பட்டு இருந்த செல்போன் ஸ்டாண்ட் அகற்றப்பட்டது.