சார்பட்டா பரம்பரை படத்திற்கு பின் இரண்டு ஹீரோக்களை வைத்து இயக்கும் பா.ரஞ்சித்…!!!

Pa.Ranjith

தமிழில் தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா நடித்த அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர் பா.ரஞ்சித். நடித்த கார்த்திக் நடித்த மெட்ராஸ், ரஜினி நடித்த கபாலி காலா, படங்களை இயக்கினார். தற்போது அவரது இயக்கத்தில் ஆர்யா துஷாரா விஜயன் நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது.

தவிர நீலம் புரடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள்,இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி இருந்தது. தற்போது சமுத்திரக்கனி நடிக்கும் ரைட்டர் என்ற படத்தை தயாரிக்கிறார். இதற்கிடையே அவருக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு வந்தது.

அழைத்தவர் நண்பர்கள் என்றாலும் திரையில் முகம் காட்ட கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் பா.ரஞ்சித் அந்த வாய்ப்புகளை மறுத்து விட்டார். இந்த நிலையில் இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் காதல் கதையை இயக்குவதாக அறிவித்துள்ளார். இப்படத்திற்கு நட்சத்திரம் நகர்கிறது என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன் நடிக்கும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது.