தமிழக மக்களிடம் நல்ல பெயர் எடுக்க நினைக்கும் பாஜக தலைவர் கே.அண்ணாமலை…!!!

K.Annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் மீன்வளக் கொள்கை குறித்து மக்களுக்கு விளக்கும் வகையில் 30ஆம் தேதி இன்று பிற்பகல் 3 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக பாஜக மீனவர் அணியின் சார்பில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக உரிமைக்கு எதிராக மேகதாது அணை கட்ட முயற்சிகளை மேற்கொள்ளும் கர்நாடக அரசு மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சாவூரில் வருகிற ஐந்தாம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் எனது தலைமையில் தஞ்சை பனகல் பில்டிங் அருகில் நடைபெறும் என்றார் என தெரிவித்து உள்ளார்.