கோமா நிலைக்கு சென்ற பிரபல சீரியல் நடிகர் வேணு அரவிந்த்…!!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

Venu Aravind

சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றுள்ளதாகவும் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் வேணு அரவிந்த் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் காதல் பகடை, காதல் வாங்கி வந்தேன், காசளவு நேசம் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

நடிகர் வேணு அரவிந்த் அதோடு ரேடான் தயாரிப்பில் ராதிகா தயாரித்த செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி ஆகிய சீரியல்களிலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து அலைபாயுதே, வல்லவன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சபாஷ் சரியான போட்டி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு கொரோனா தொற்று தாக்கப்பட்ட பின்பு நிமோனியா வந்ததாலும் மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. தற்போது வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இத்தகவலை அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு வரவேண்டும் என வாழ்த்துக்களையும், பிரார்த்தனையும் தெரிவித்து வருகிறார்கள்.