அரசு மருத்துவமனை முன்பு இறந்து கிடந்தவர் வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய்…!!! ஆச்சரியத்தில் மக்கள்.

rupees

மதுரை அரசு மருத்துவமனையில் முன் இறந்து கிடந்த அவரின் வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மதுரை அரசு மருத்துவமனை முன் 61 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுக்கு உடையுடன், ஈ மொய்த்த நிலையில் நேற்று காலை இறந்து கிடந்தார், தல்லாகுளம் போலீசார் அவரது ஆய்வு செய்தபோது மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி பாஸ்புக் இருந்தது. அதில் அவரது பெயர் ராதா நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் என தெரிந்தது.

வங்கி அதிகாரிகளிடம் விசாரித்த போது ராதா மதுரை காமராஜ் பல்கலையில் லேப் டெக்னீசியன் ஆக இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர் என்றும் அதில் கிடைத்த 20 லட்சம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்து இருப்பதும் தெரிந்தது. ராதாவுக்கு திருமணமாகவில்லை. இரு சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளனர். டெபாசிட் செய்த தொகையில் இருந்து கிடைத்த வட்டியை எடுத்து செலவழித்து வந்துள்ளார்.

சிறிது மனநலம் பாதித்தவர் பத்து நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவரை அரசு மருத்துவமனையில் சகோதரர் சேர்த்த நிலையில் மாயமானார் பல இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில் நேற்று இறந்து கிடந்தார்.