இனியா இனியாவது இப்படி புகைப்படம் வெளியிடாதீர்கள் கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..!!!

actress iniya latest photoshoot

இனியா தமிழ் சினிமாவில் பாடகசாலை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். மிஷ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து வாகை சூடவா என்ற படத்தில் மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அந்த படத்திற்கு இவருக்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைத்தது. தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் இனியாவிற்கு குவிந்தது காரணம் வாகை சூட வா என்ற படம் கொடுத்த வரவேற்பு தான்.

அதன் பின் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இனியா மௌனகுரு என்ற படத்தில் அருள்நிதி அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அந்தப் படமும் பெரிய ஹிட் படமாக இனியாவிற்கு அமைந்தது. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டிய இனியா அம்மாவின் கைப்பேசி சென்னையில் ஒரு நாள் படங்களில் நடித்திருந்தார்.

தமிழில் முன்னணி நடிகையாக இனியா வலம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று ரசிகர்கள் நினைத்தார்கள் ஆனால் அதன் பின் வந்த சில படங்கள் இனியாவிற்கு பெரிய வரவேற்பு கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

நன்றாக நடிக்கக்கூடிய நடிகை ஏன் ஒரு பட பாடல் எல்லாம் ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார் என்று பேச ஆரம்பித்தார்கள். தற்பொழுது இனியா அவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் அம்மணி பட வாய்ப்புகள் குறைய குறைய சமூக வலைத்தளத்தில் குறைவான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதனை பார்த்த ரசிகர்கள் இனியா இனியாவது இது போன்று பதிவு செய்யாதீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.