யானைகள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 15 கி.மீ தூரம் நடந்தே சென்று மலை கிராம மக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

Ma.Subramaian

தேன்கனிக்கோட்டை அருகே யானைகள் நடமாடும் வனப்பகுதியில் 15 கிலோமீட்டர் நடந்தே சென்று மலை கிராம மக்களிடம் அமைச்சர் சுப்பிரமணியம் குறைகளை கேட்டறிந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மக்களை தேடி அதிகாரிகளுடன் திட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி மற்றும் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் மாலை தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொடகரை மலை கிராமத்தில் மலைவாழ் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது கிராமத்துக்கு போக்குவரத்து வசதி, குடியிருப்பு வசதி, பட்டா, 100 நாள் வேலை குறித்து போக்குவரத்துத் வசதி இல்லாததால் அவசர காலத்தில் மருத்துவ வசதி கிடைக்காமல் தவிப்பிற்கு உள்ளதாகவும், பள்ளி ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் வந்து செல்ல முடியாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாகவும் பொது மக்கள் முறையிட்டனர்.

அதற்கு அமைச்சர் சுப்பிரமணியன் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் துவக்க உள்ளதாக மலை கிராமங்களுக்கு தனியாக 108 ஆம்புலன்ஸ் சேவை விரைவில் துவக்க உள்ளதாக தெரிவித்தார். அதேபோல் பெட்ட முகிலாளம் மலை கிராமத்தில் மக்களிடம் அடிப்படை வசதிகளை பற்றி அமைச்சர் கேட்டறிந்தார்.

பெட்டமுகிலாளம் மலை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் இரவு தங்கி அமைச்சர் நேற்று காலை யானைகள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மூகங்கரை மலை கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.