நடிகை யாஷிகாவின் தங்கை மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட பரபரப்பு தகவல்…

Yasika anand

அதிவேகமாக கார் ஓட்டியது உயிர் சேதம் ஏற்படுத்துவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை யாஷிகா அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் நள்ளிரவு காரில் பயணம் செய்திருக்கிறார். அப்போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேறிக்காடு பகுதியில் சென்றபோது அவர் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி பாவனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நடுவே அதிவேகமாக கார் ஓட்டியது விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

தற்போது நடிகை யாஷிகாவின் தங்கை கூறுகையில் தற்போது யாஷிகாவிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளது. பிறகு ஐசியு வார்டில் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். இன்னும் சில நாட்களில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் நடக்க உள்ளதாக கூறி இருக்கிறார். அடுத்து யாஷிகாவின் தோழி வள்ளி ஷெட்டிக்கு இரங்கலை தெரிவித்து உள்ளார்.