தளபதி விஜய்க்கு சிலை வைத்து மாஸ் கட்டிய விஜய் ரசிகர்கள்…!!!

thalapathy vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முதன்மையானவர் நடிகர் விஜய். நடிகர் விஜய்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் ஏராளமானோர் இருந்து வருகின்றனர். இவருக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம் போன்ற பல்வேறு மாநிலங்களில் ரசிகர்கள் உள்ளனர். நடிகர் விஜய் படங்கள் தியேட்டர்களில் வெளியானால் திருவிழா போல் களைகட்டும்.

தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விஜய் ரசிகர்கள் ஒன்று திரண்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் விஜய் ரசிகர்கள் பல பகுதிகளில் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

மங்களூர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதிக்கு பெரிய சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.இந்த சிலையின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தளபதி பனையூர் அலுவலகத்தில் இன்று மீட்டிங் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை மங்களூர் விஜய் மக்கள் மையம் ரசிகர்கள் செய்துள்ளனர். இந்த சிலையை விஜய் மக்கள் மைய மாநில தலைவர் குஷி ஆனந்த் சிலையைத் திறந்து வைத்துள்ளார்.