வேம்புலி கதாபாத்திரத்தை தல அஜித்திற்கு அர்ப்பணிக்கிறேன் சார்பட்டா வில்லன் உருக்கம்.

sarpotta villian praises thala ajith

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யாவின் அசத்தலான நடிப்பில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் தான் சார்பட்டா பரம்பரை. படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தில் நடித்த அனைவரையும் பாராட்டி வருகின்றனர் அந்த அளவில் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்து அசத்தி இருக்கிறார்கள்.

குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் ஜான் கொக்கேன் என்பவர் நடித்திருந்தார். படத்தை பார்த்த ரசிகர்கள் வேம்புலி கதாபாத்திரம் பற்றி அதிகமாக சமூக வலைதளங்களில் உரையாடி வருகின்றனர் இந்நிலையில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மூலம் தல அஜித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட போஸ்டில் நன்றி தல அஜித் சார் எப்போதும் என்னை உற்சாகப்படுத்தினார்கள் என்னையே நம்புவதற்கும் நீங்கள்தான் ஊக்கப்படுத்தினர்.

வீரம் படத்தின் ஷூட்டிங்கின் போது உங்களுடன் செலவிட்ட நேரங்கள் என் வாழ்க்கையில் பெரிய பாடத்தைக் கற்றுத் தந்தது ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்கவும் சிறந்த மனிதர்களாக மாற நீங்கள் என்னை ஊக்குவிக்கிறார்கள். இந்த வேம்புலி கதாபாத்திரத்தை நான் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் லவ் யூ சார் என்று கூறியுள்ளார்.