அரசு பள்ளி மாணவிகள் இருவர் ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சிக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளார்…!!!

Russia Space Training

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவியர் இருவர் ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த ஐஏஏஏஏ என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் 2021 ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான விண்வெளி ஆராய்ச்சிகள் தொடர்பான போட்டி நடந்தது.

அந்தப் போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங்களை பிடித்த மாண வர்கள் ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவியர் ரகசியா, தேவாஸ்ரீ ஆகியோர் விண்வெளி பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.

அந்த மாணவியரை கல்வி அமைச்சர் மகேஷ் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். அரியலூர் சிஇஓ ராமன் டி இ ஓ. அம்பிகாபதி தலைமையாசிரியர் இன்பராணி ஆகியோரும் பாராட்டினர்.