யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் 2026ஆம் ஆண்டு பாஜக தமிழகத்தை ஆளும் – பாஜக தலைவர் கே.அண்ணாமலை திட்டவட்டம்..!!!

K.Annamalai

வரும் 2024 ஆம் ஆண்டு பாஜக அதிகபட்ச தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை நிலைநாட்டும் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக நாளை மறுநாள் கே.அண்ணாமலை பொறுப்பேற்க உள்ளார். அதற்காக இன்று கோவையில் இருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டார். கோவையில் அண்ணாமலைக்கு பாஜக கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவிநாசி தண்டுமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு உள்ளார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக பாஜகவில் இருந்து பல பேருக்கு அகில இந்திய அளவில் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவில் ஒருபக்கம் இளமையானவர்களும், மற்றொரு பக்கம் அனுபவம் உள்ளவர்களும் கட்சியில் இருப்பார்கள். மற்ற கட்சியை போல குடும்ப உறுப்பினர்களுக்குகே பொறுப்புகள் தருவார்கள்.

பாஜகவை பொருத்தவரை மாநிலத் தலைவர் என்ற பொறுப்பு தமிழக மக்களை ஒன்றிணைத்து அழைத்துச் செல்வதை ஒரு பொறுப்பாக தான் பார்க்கிறேன். இதில் வயது என்பது முக்கியம் கிடையாது. இது ஒரு கூட்டு முயற்சி. பாஜக தனி மனித கட்சி கிடையாது. நான் பாஜக கட்சியின் தலைவர் அல்ல, சேவகன். மத்திய அரசின் திட்டங்களை ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்து செல்வதே எங்களின் நோக்கம். உங்களை நோக்கி எங்களின் திட்டங்களை எடுத்து செல்வோம் என தெரிவித்துள்ளார்.