எங்ககளிடம் ஆடி A6 கார் மட்டுமே உள்ளது எந்த சொகுசு கார்ரும் இல்லை. மதன் மீது எந்த தப்பும் இல்லாதது போல பேசும் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா.

madhan wife kiruthiga press statement

ஆபாச யூடியூபர் பப்ஜி மதன் மீது இன்று குண்டர் சட்டம் பாய்ந்தது அதனைத் தொடர்ந்து அவரது மனைவி கிருத்திகா தனது அட்வகேட் உடன் கமிஷனரை சந்திக்க வந்தார்.

அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது என்னுடைய கணவர் மதன் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சைனா வெர்சன் பப்ஜி விளையாட்டை விளையாடவில்லை அவர் விளையாடியது தென்கொரியா வெர்சன் .

ஒரு நாளைக்கு 20 மணி நேரம் யூட்யூபில் விளையாடி சம்பாதிப்பார் நாலு மணி நேரம் தான் ஓய்வு எடுப்பார் அவருக்கு யூடியூபில் இருந்து மட்டுமே பணம் வரும்.

மதன் மீது 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது என்று கூறுகிறார்கள் குறிப்பிட்ட நாலு பேர் மட்டும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வெவ்வேறு பெயரில் புகார் அளித்து வருகிறார்களே தவிர 200-க்கும் மேற்பட்ட புகார்கள் வருகிறது என்றால் அவர்கள் யார் என்று குறிப்பிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் நாங்கள் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம் எங்களிடம் எந்த சொகுசு காரும் கிடையாது எங்களிடம் உள்ளது ஆடி A6 என்ற கார் மட்டும்தான். வீட்டு வாசலில் நிற்கும் கார் எல்லாம் எங்கள் கார் ஆகுமா என்று கேட்டவர்.

மதனின் யூடியூப் சேனலில் என்னுடைய பேங்க் அக்கவுண்ட் பயன்படுத்தி உள்ளார் தவிர எனக்கும் அந்த யூடியூப் சேனலுக்கு எந்த சம்மந்தமும் கிடையாது.

நான் மதனுடன் சேர்ந்து பேசியதாக கூறுகிறார்கள் அது உண்மை அல்ல பல வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டவை மதன் ஆபாசமாக பேசியதாக கூறுகிறார்களே அவரை பேச வைத்தவர்கள் கமெண்டில் பாருங்கள். கமெண்டில் அப்படி பேசி இருப்பதால் தான் மதன் அப்படி பேசி இருப்பார் என்று கூறியுள்ளார் மதனின் மனைவி கிருத்திகா.

இனி சட்டப்படி நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று கூறியுள்ளார் மதனின் மனைவி.