காவி மாஸ்க் மருத்துமனையில் அட்மிட் . திமுக தான் காரணம் கொந்தளிக்கும் அண்ணாமலை..!!!

bjp annamali reported

தமிழகத்தில் பாஜக நாலு தொகுதியில் ஜெயித்தது அதிலிருந்தே பாஜகவை சேர்ந்த தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை பெரிய நம்பிக்கை எப்படியாவது பாஜக தமிழகத்தில் வலுவான கட்சியாக கொண்டு வந்துவிடலாம் என்று முயற்சி செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் கமலாலயத்தில் பாஜக கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஆலோசனை நடைபெற்றது அதில் நடிகை குஷ்பு, காயத்ரி ரகுராம் மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர் கலந்துகொண்டு கொண்டனர். பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கூட தமிழ் திரை உலகத்தில் இருந்து வந்து பாஜகவை மக்களிடம் கொண்டு செல்ல பணியாற்றி வருகிறார்கள் என்று மூவரையும் புகழ்ந்து தள்ளினார். அதுமட்டுமல்லாமல் திமுகவினரின் ஒரு சில செயல்களை கண்டித்தும் அண்ணாமலை பேசி வந்தார்.

இந்நிலையில் திண்டுக்கல்லில் மணல் கடத்த முயற்சி செய்த திமுகவினரை தடுத்து நிறுத்திய பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு ஒன்றிய தலைவர் வரதராஜன் மீது திமுக குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் செய்துள்ளார்கள் காயமடைந்த வரதராஜன் தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அண்ணாமலை டுவிட்டர் வாயிலாக தெரிவித்தார் தெரிவித்தது மட்டுமல்லாமல் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார் அதில் பாஜகவினர் இருவர் காவி நிற மாஸ் அணிந்துகொண்டு அதில் ஒருவர் சிகிச்சை பெறுவது போல இருக்கிறது அந்தப் புகைப்படம்.

அந்த புகைப்படத்தை பார்த்த திமுகவினர் சம்பவம் எங்கு நடந்தது எங்கேயோ ஒரு மூலையில் நிற்கும் பொக்லிங் புகைப்படம் எடுத்து கொண்டு மருத்துவமனையில் கூட காவி நிற மாஸ்க்கை அணிந்து சிகிச்சை பெறுவது போல புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு திமுக ஆட்சியில் கலங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று கூறி வருகின்றனர். அப்படி மணல் கொள்ளை நடந்திருந்தால் அந்த புகைப்படத்தை வெளியிடலாமே என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர்.