பாஜகவை வலுப்படுத்தாமல் ஓயமாட்டேன் என்ற மனநிலையில் குஷ்பு. புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை..!!! அண்ணாமலை ஜிக்கு நன்றி தெரிவித்த குஷ்பு..!!!

kusbhu attends bjp meeting after election

பாஜக தனது கட்சியை வலுப்படுத்தி எப்படியாவது தமிழகத்தில் புகுந்து விட முடியாதா என்ற ஒரே இலக்கோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தன்னிச்சையாக தமிழ்நாட்டில் நிற்க முடியாது என்று முடிவு செய்த பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தது அதுமட்டுமல்லாமல் பாஜகவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா துறை சார்ந்த நடிகர் நடிகைகளை இணைத்துக்கொண்டது.

தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற ஒரே வைராக்கியத்துடன் செயல்பட்ட பாஜக முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை அவர்களை பாஜகவில் இணைத்துக்கொண்டு பொறுப்புகளை கொடுத்து அவரை தேர்தலில் வேட்பாளராக நிற்க வைத்தது. அதுபோல தமிழ் சினிமாவில் பிரபலமான குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம் மற்றும் கலா மாஸ்டர் ஆகியவற்றை பாஜகவில் இணைத்துக்கொண்டு பிரபலத்தை தேடியது.

குஷ்புவும் பாஜகவின் வேட்பாளராக ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் குஷ்பூ அவர்களை ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைத்து மக்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து பாஜகவினர் பூரிப்பில் இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் குஷ்பூ எங்க வீட்டு மகள் போல உங்களுக்கு தான் ஓட்டு என்று ஒரு பாட்டி சொல்வது போலவும் வீடியோக்களை வெளியிட்டார்கள். ஆனால் தேர்தல் முடிவுகள் வந்து குஷ்புவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெயித்தார். சில இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்தது.

தேர்தலுக்குப் பிறகு நேற்று கமலாலயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றது அதில் குஷ்பூ கலா மாஸ்டர் நமிதா மற்றும் காயத்ரி ரகுராம் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள் அந்த கூட்டத்தில் பாஜக கட்சியை எப்படி வலுப்படுத்துவது என்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கண்ட கலா மாஸ்டர் குஷ்பு நமிதா காயத்ரி ரகுராமன் அவர்களோடு ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார் அதனை பார்த்த பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழ்த் திரையுலகத்தை சேர்ந்த பெண்கள் பாஜகவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு பயம் இல்லை அவர்கள் சிந்தனையில் தேசியவாதி முக்கியமாக கட்சியை மக்களிடம் கொண்டுசெல்ல அடிமட்டத்திலிருந்து பணியாற்றுகிறார்கள் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் அதனைப் பார்த்த குஷ்பூ உங்கள் அருமையான வார்த்தைக்கு மிக்க நன்றி ஜி இது கடினமாக உழைக்கவும் நம்மை நாமே மேம்படுத்தவும் தூண்டுகிறது நன்றி என்று கூறியுள்ளார்.

பாஜகவை வலுவான கட்சியாக மாற்றுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதனை செய்ய குஷ்பு ரெடியாக இருப்பதாக கூறுகின்றனர் சிலர் பாஜகவினர்.