தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என்று கிண்டல் செய்தார்கள்..!!! தற்பொழுது தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது சந்தோசமாக உள்ளது – வானதி சீனிவாசன்.

vanathi srinivasan BJP

வானதி சீனிவாசன் தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளில் கோவை தெற்கு முடிவுகள் இறுதிவரை பரபரப்பாக இருந்தது அந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கமலஹாசனும் பாஜக சார்பாக வானதி சீனிவாசனும் போட்டியிட்டனர்.

நீண்ட மணி நேரம் கமலஹாசன் அந்தத் தொகுதியில் முன்னணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வந்தார் ஆனால் மாலை தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்ட பின் கமலஹாசனை ஓவர்டேக் செய்தார் வானதி சீனிவாசன்.

எம்எல்ஏ கமலஹாசன் என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தார்கள் மக்கள் சிலர் திடீரென்று அந்தத் தொகுதியில் வானதி சீனிவாசன் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். தேர்தல் வாக்கு என்னும் இடத்தில் ஒரு பேப்பர் பேனாவை வைத்து ஏதோ ஒன்றை எழுதிக் கொண்டே இருந்தார் கமலஹாசன். வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற பிறகு கமல்ஹாசன் அவர்களிடம் பேசியுள்ளார் அது என்ன என்பதை சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரே தெரிவித்துள்ளார்.

பாஜகவை தெற்கு பகுதியில் ஜெயித்தது சந்தோஷம் தேர்தல் வாக்குகள் எண்ண பட்டு மதியம் வரை மற்ற இடங்களில் பாஜக முன்னிலை என்று செய்திகள் வந்ததை பார்த்து சந்தோஷம் அடைந்தேன். தாமரை மலரவே மலராது என்று கூறினார்கள் கேலி செய்தார்கள் தற்பொழுது தாமரை மலர்ந்து விட்டது என்று சந்தோஷம் அடைந்தேன்.

ஒருவேளை தேர்தலில் நான் தோற்றால் கமலஹாசனுக்கு ஒரு சால்வை அணிவித்து விட்டு செல்லலாம் என்று நினைத்தேன் ஆனால் தேர்தல் முடிவில் நான் ஜெயித்ததாக அறிவித்தார்கள். கமலஹாசன் அவர்கள் சற்றுநேரம் அமர்ந்திருந்தார் அதன்பின் புறப்பட தயாரானார் அவரிடம் சென்ற நான் தேர்தல் பிரச்சாரத்தில் உங்களை காயப்படுத்தும் படி ஏதும் பேசியிருந்தால் சாரிங்க என்று கூறினேன் அதற்கு அவர் இட்ஸ் ஓகே என்று கூறினார். அவரிடம் நீங்கள் நல்ல வாக்குகளை பெற்றுள்ளீர்கள் என்று கூறினேன் அதற்கு ஆல்ரைட் என்று சொல்லி விட்டு புறப்பட்டார்.

தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு அதன்பின் வெற்றியை அறிவித்த பின் தான் தெரிந்தது. மக்கள் ஸ்டார்களை நம்புகிறார்கள் என்று அது மிகவும் வருத்தமாக இருந்தது. நான் தொகுதியில் இறங்கி வேலை செய்து உள்ளோம் எனக்கும் கமல் அவர்களுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் மிகக்குறைவு என்னை பின் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தார் கமல்.

எது எப்படியோ தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது என்று கேலி செய்தார்கள் தற்போது தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது அதுவே எனக்கு சந்தோஷம் என்று கூறியுள்ளார்.