கையில் துப்பாக்கியுடன் நிற்கும் விஜய் கொல மாஸாக இருக்கும் தளபதி65 ஃபர்ஸ்ட் லுக்…!!! படத்தின் பெயர் என்ன தெரியுமா?

thalapathy vijay beast

தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவரின் அடுத்த படத்திற்கு மாபெரும் வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருக்கிறது இந்நிலையில் முதலில் முருகதாஸ் அவர்கள் விஜயை வைத்து இயக்குவதாக இருந்தது ஒரு சில காரணங்களால் முருகதாஸ் விஜய் படத்தை விட்டு விலகினார் அதன்பின் வெற்றிமாறன் அட்லி என பெயர்கள் அடிபடத் தொடங்கியது. நீண்ட நாட்களாக மௌனம் காத்து வந்தது விஜய் தரப்பு. விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் தளபதி விஜய் நெல்சன் உடன் இணைகிறார் என்று ரொம்பவே வெளியிட்டது.

அந்த பிரமோ துப்பாக்கி குண்டுகள் நிறைந்த கேங்க்ஸ்டர் படம் போல சித்தரிக்கப்பட்டது. ஏற்கனவே நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா சுமாராகப் போனதால் நெல்சன் தற்பொழுது சிவகார்த்திகேயனை வைத்து எடுத்து ரிலீஸ் ரெடியாக இருக்கும் டாக்டர் படத்தை பெரிதாக நம்பியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து இயக்கும் தளபதி 65 படம் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று கூறுகிறார்கள் சினி வட்டாரத்தினர்.

இன்று விஜயை வைத்து தளபதி 65 படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் நெல்சனுக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க விஜயின் பிறந்தநாள் நாளை என்பதால் இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள்.

படத்தின் பர்ஸ்ட் லுக்கில் மாஸ்ஸாக துப்பாக்கியை வைத்து கொண்டு விஜய் நிற்பது போல உள்ளது. படத்தின் பெயர் பீஸ்ட் (BEAST ) என்று வைத்து உள்ளார்கள்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான உடனே ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர்.