கிராமத்து பெண்ணை போல சேலை கட்டி போஸ் கொடுத்த தர்ஷா..!!! அடேங்கப்பா செம அழகு ரசிகர்கள் கமெண்ட்.

dharsha gupta unseen village girl photoshoot

தர்ஷா குப்தா இன்றைய இளைஞர்களின் கனவு கன்னி என்றே சொல்லலாம். கொரோனா இரண்டாம் அலையில் தன்னால் முடிந்த அளவிற்கு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி வந்தார்.

அதுமட்டுமல்லாமல் வெளியில் சென்று வருவதால் தனது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று தனியாக வாடகை வீடு ஒன்றை எடுத்து மக்களுக்கு சேவை செய்து வந்தார்.

கோவை பொண்ணு பெங்களூரில் ஆசிரியராக வேலை பார்த்தவர் எப்படி சினிமா துறைக்கு வந்தார் என்று கேட்டபோது அதற்கு அவர் நான் கோவையில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தேன் என்னுடைய தோழியை பார்ப்பதற்காக சென்னை வந்தேன் அப்போது மேகஸின் போட்டோஷூட் நடந்தது. என் தோழி மாடல் என்பதால் அவர்களிடம் என்னையும் சூட்டில் நடிக்க சொல்லி கேட்டார்கள் அதன்பின் என் ஆசிரியர் பணியை விட்டுவிட்டு மாடலிங் துறைக்குள் வந்தேன்.

அதன்மூலம் எனக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது முள்ளும் மலரும், அவளும் நானும், செந்தூரப்பூவே போன்ற தொடர்களில் நடித்தேன் என்று கூறிய அவர் எனக்குப் பெரிய பிரபலத்தை தேடித்தந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

அந்த நிகழ்ச்சியில் நான் போட்டியாளராக பங்கு பெற்றது என்னை அடையாளம் காணக்கூடிய நடிகையாக பிரபலப்படுத்தியது என்று கூறியுள்ளார் தற்பொழுது தர்ஷா ருத்ரதண்டவம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. கிராமத்து பெண் போல சேலை கட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.