ஆபாசமாக பேசி சில்மிஷ வேளையில் ஈடுபட்ட மதனின் மனைவி கைது..!!! அதிரடி நடவடிக்கை எடுக்கும் சி.பி.ஐ.

pubg youtuber madhan wife arrested

யூடியூப் பல திறமைசாலிகளை நமக்கு அடையாளம் காட்டிய செயலி. இன்று சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை யூடியூப்பில் சேனல் ஒன்று தொடங்கி தனக்கென ஒரு அடையாளத்தை பதிவிட்டு வருவதோடு நல்ல விஷயங்களையும் யூடியூப்பில் பதிவிட்டு பிறருக்கும் தெரியப்படுத்தி வருகின்றனர்.

ஒரு பக்கம் யூடியூப்யை நல்லதாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் கூட்டம் இருந்தாலும் சிலர் யூடியூப்பை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் யூடியூபர் மதனும் ஒருவர்.

பப்ஜி விளையாட்டில் உள்ள ட்ரிக்ஸ் பற்றி சொல்லுகிறேன் என்று 2019ஆம் ஆண்டு மதன் என்பவர் மதன் யூடியூப் சேனல் என்று ஒரு சேனல் ஆரம்பித்தார். பப்ஜி பிரியர்களுக்கு அந்த சேனல் பெரிய தீனியாக இருந்தது. சிறுவர்கள் முதல் பள்ளி மாணவிகள் உட்பட அனைவரும் பதிவு விளையாட்டில் ஆர்வமாக இருந்ததால் மதனின் சேனலை பின் தொடர்ந்து வந்தனர்.

இந்த சேனலில் சிறுவர்களை ஆபாச வார்த்தையால் திட்டுகிறார் மற்றும் வீடியோ சாட்டுக்கு வரச் செய்து சில்மிஷங்கள் செய்கிறார் என்று மதன் மீது அடுக்கடுக்காக புகார்கள் வந்து கொண்டே இருந்தது.

அதுமட்டுமல்லாமல் சிறுவர் சிறுமிகளை மிரட்டி பணம் பறித்ததாக சில ஆபாச வீடியோக்களை இணையத்தில் விற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தது. மதனால் பாதிப்படைந்தவர்கள் மதன் மீது புகார் கொடுக்க சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நேரத்தில் மதன் தலைமறைவானார்.

தலைமறைவான அதனை ஒரு பக்கம் போலீசார் தேடி வரும் நிலையில் யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா போலீசார் கைது செய்துள்ளனர். மதனின் சேனலுக்கு அவர்தான் அட்மினாக இருந்ததாகவும் மதன் உடன் இணைந்து ஆபாசமாக பேசிய வீடியோ பதிவு உள்ளதால் அவரையும் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மதனின் மனைவி கிருத்திகாவை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். கிருத்திகாவிடம் விசாரணை செய்த நீதிபதிகள் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை கிருத்திகாவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.

விரைவில் மதன் சிக்குவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.