டாஸ்மாக் அவளோ முக்கியமா உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா பதில் சொல்லுங்கள் முதல்வரே – குஷ்பு ஆவேசம்.

khusbhu statement about tasmac reopen

நடிகை குஷ்பூ தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளராக ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டார்.

குஷ்புவிற்கு கிடைத்த வரவேற்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது அந்த பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து குஷ்புவை எங்கள் வீட்டு பிள்ளை நீங்கள் என்றெல்லாம் கூறியதாக வீடியோக்கள் பாஜகவினர் வெளியிட்டு வந்தனர்.

சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்தது ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். சில நாட்கள் அமைதியாக இருந்த குஷ்பூ தற்போது மீண்டும் பாஜகவிற்கு குரல் கொடுத்து வருகிறார்.

தனது கருத்தினை வெளிப்படையாக ட்விட்டரில் கூறிவரும் குஷ்பூ தற்பொழுது கொரோனா ஊரடங்கை கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வரும் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி வழங்கியது குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார் அதில் எல்லாத்தையும் விட டாஸ்மார்க் அவ்வளவு முக்கியமா வாவ் உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா இதற்கு பதில் சொல்லுங்கள் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே என்று கூறியுள்ளார்.

அதற்கு திமுகவினர் மேடம் அவர் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது படிப்படியாக தான் எல்லாம் சரி செய்ய முடியும் வேண்டுமென்றே முதல்வரை குறை சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றெல்லாம் ட்விட் செய்துவருகின்றனர்.

ஒரு சிலர் அது என்ன மேடம் உங்க பாரத அரசு மட்டும் இந்த கொரோனா தொற்று நேரத்துல கூட GST வரி வசூல் பண்ணலாமா. இப்போ சொல்லுங்க உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.