தமிழகத்தில் வருகின்ற 14 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!!! எதற்கெல்லாம் அனுமதி எதற்கெல்லாம் அனுமதி இல்லை லிஸ்ட் இதோ.!!!

tn lockdown rules

தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் பரவல் குறைந்து வந்தாலும் சில மாவட்டங்களில் தாக்குதல் குறையாமல் இருப்பதால் மக்களின் நலன் கருதி ஊரடங்கு வருகிற 14-ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் நீடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோயமுத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் ஊரடங்கினை நீடிப்பது நல்லது என்று அனைத்து குழுவினரும் பரிந்துரைத்துள்ளனர்.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கொண்ட 11 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் அழகு நிலையங்கள் சலூன்கள் ( AC இல்லாமல் ) திறக்க அனுமதி. பூங்காவில் நடைப்பயிற்சி செய்ய அனுமதி.

11 மாவட்டங்களில் எலெக்ட்ரீஷியன் ,பிளம்பர், சுயதொழில் செய்பவர்களின் பதிவுடன் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல அனுமதி.

11 மாவட்டங்களில் வேளாண் உபகரணங்கள், பழுது நீக்கும் கடைகள், கண் கண்ணாடி கடை, கைவினைப் பொருட்கள் விற்பனை கடைகள் குறிப்பிட்ட நேரத்தில் இயங்க அனுமதி.

27 மாவட்டங்களில் செல்போன் மற்றும் அது சார்ந்த கடைகள். மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்க அனுமதி.

பொதுப் போக்குவரத்துக்கு தடை மீண்டும் நீடிக்கிறது. இப்பதிவுடன் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி.

27 மாவட்டங்களில் தொழிற்சாலை ஊழியர்கள் இ-பதிவுடன் இருசக்கர வாகனத்தில் அடையாள அட்டையுடன் செல்ல அனுமதி .

பள்ளி கல்லூரிகள் மாணவர் சேர்க்கை தொடர்பாக நிர்வாகப் பணிகளில் ஈடுபட அனுமதி.

தேனீர் கடைகள் திறக்க தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதி.

இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகின்ற 14ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

விவரமாக தெரிந்து கொள்ள இதை படிங்க: