தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை அமைச்சர் ஆலோசனை..!!!

pk sekar babu tamil prayer in tamilnadu temple

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை பல வருடங்களாக அரசுக்கு வைத்து வருகின்றனர்.

தற்போது முதலமைச்சராக மு க ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்க கூறி கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் இந்து சமய அறநிலைத்தறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் 100 நாட்களில் இந்த விஷயம் குறித்து நல்ல பதிலை அளிப்பதாகவும், தமிழில் அர்ச்சனை செய்வது பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

வருகிற ஜூன் 12ம் தேதி காலை 10 மணிக்கு அமைச்சர் PK சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற உள்ளதாகவும் அனைத்து அதிகாரிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு அறநிலை துறை அதிகாரிகளுக்கு ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கூட்டத்தில் மாவட்ட வாரியாக குழு அமைத்தல், யானைகளை பராமரித்தல், அறங்காவலர் நியமனம் மற்றும் தமிழில் அர்ச்சனை செய்வது பற்றி ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.