சொந்த வீட்டிலேயே 10 ஆண்டுகளாக காதலியை மறைத்து வைத்திருந்த காதலன்!!! கில்லி விஜயையே மிஞ்சிட்டாரே.

Rahman Sajitha

கேரளாவில் குடும்பத்திற்கு தெரியாமல் தன் காதலியை 10 ஆண்டுகளாக ஒரு அறையில் மறைத்து தங்கவைத்த காதலன். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயிலூர் கிராமத்தை சேர்ந்தவர். ரஹ்மான் (34 ) வீடு அருகே இருந்த பெண் சாஜிதா(28). இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டினருக்கும் தெரியாமல் காதலித்து வந்துள்ளனர். பத்து வருடங்களுக்கு முன்பு சாஜிதா திடீரென மாயமாகியுள்ளார். அப்பொழுது சாஜிதாவின் வயது 18 . அது குறித்து அவரது பெற்றோர் 2010 ஆம் ஆண்டு நெம்மாரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்பொழுது ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் சாஜிதா பற்றி எதுவும் தெரியவில்லை என கூறியுள்ளனர்.

தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு ரகுமான் தனது சின்ன வீட்டில் ஒரு அறையில் சாஜிதாவை மறைத்து வைத்த செய்தி வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. ரஹ்மான் பத்தாண்டுகளாக சாஜிதாவை ஒரு அறையில் பாதுகாப்பாக தங்கவைத்து அவருக்கு உணவு வழங்கி உள்ளார். சிறிய அறையில் ஒரு ஜன்னல் இருந்துள்ளது. அந்த ஜன்னல் வழியாக கம்பிகளை நீக்கிவிட்டு இரவு நேரங்களில் மட்டும் கழிவறையை பயன்படுத்தி உள்ளார். அதேபோல் ஜன்னலுக்கு வெளியே குதித்து வீட்டிற்கு வெளியே குளியலறையை பயன்படுத்தி உள்ளார். அந்த ஜன்னல் வழியாகவே யாரும் இல்லாத நேரங்களில் வெளியே வந்து சென்று உள்ளார். மேலும் சாஜிதா நோய்வாய்ப்பட்ட போது ரஹ்மான் மருந்துகளை கொடுத்து வந்துள்ளார். அந்த அறையில் சிறிய டிவி ஒன்றையும் வைத்துள்ளார். ரஹ்மான் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வந்துள்ளார். ஆகையால் அந்த அறையில் சிறப்பான பூட்டு அமைத்து அதில் மின்சார கம்பிகளை வெளியே தெரியும்படி வைத்துள்ளார்.

அவரது குடும்ப உறுப்பினர்களை பூட்டை தொடகூடாது என்று கூறியுள்ளார். அவரது குடும்பம் இவ்வாறு செய்வதை கண்டு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்குமோ என்று எண்ணி உள்ளனர். அதேசமயம் கொரோனா ஊரடங்கால் ரகுமான் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். ஆகையால் மார்ச் மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மேலும் பாலக்காட்டில் உள்ள விதானசேரி கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதனிடையே ரஹ்மான் குடும்பத்தினர் அவரை காணவில்லை என போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் ஜூன் 8-ஆம் தேதி ரஹ்மானின் சகோதரர் அவரை நெம்மாரா பகுதியில் கண்டுள்ளனர். உடனே போலீசாரிடம் தகவல் கொடுத்து அவர்களை சந்தித்துள்ளனர். அப்போதுதான் பத்தாண்டுகளாக சாஜிதாவை அறையில் தங்க வைத்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒன்றாக வாழ வேண்டும் என முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதனை ஏற்ற நீதிமன்றம் சாஜிதாவை ரஹ்மானுடன் செல்ல அனுமதித்தது. மேலும் ரகுமான் கொஞ்சம் பணம் சேமித்த உடன் சாஜிதாவை திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தேன். ஆனால் பணம் கிடைக்காததால் அவரை பத்தாண்டுகளாக அறையில் தங்கவைக்க வேண்டியதாயிற்று என்று கூறியுள்ளார். மேலும் சம்பவம் குறித்து சாஜிதா கூறியது அவர் தனக்கு கிடைத்த சாப்பாட்டை எனக்கு பாதி கொடுத்து சாப்பிட்டார். அவர் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். ஆனால் ஒரு அறையில் தனியாக இருப்பது பெரும் கடினம் பகல் நேரங்களில் ஹெட்செட் அணிந்து கொண்டு டிவி பார்ப்பேன். இரவு நேரங்களில் மட்டும் வெளியே வருவேன். எனக்கு தலை வலியைத் தவிர வேறு எந்த பெரிய நோய்த்தொற்றும் இதுவரை கொடுத்ததில்லை. இனி நாங்கள் மறைந்திருக்க அவசியமில்லை என கூறியிருந்தார். இந்த வித்தியாசமான காதல் கதை எல்லோருக்குமே ஆச்சரியத்தை மற்றும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.