செஸ் கிங் விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாட இருக்கும் சூப்பர்ஸ்டார்..!!! வரும் தொகையை கொரோனா நிதிக்கு அளிக்க முடிவு.

amirkhan going to play chess with viswanathan anand

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருப்பதால் பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் தன்னால் முடிந்த அளவிற்கு நிதி திரட்டி உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மக்களுக்கு உதவுவதற்காக ஒரு புதிய செயலில் இறங்கி உள்ளார்.

தற்போது செக்மேட் COVID என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறது தனியார் chess.com என்ற அமைப்பு. இந்த நிகழ்ச்சி மூலமாக கொரோனவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யலாம் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் செஸ் கிங் மற்றும் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாட இருக்கிறார்.

விஸ்வநாதன் ஆனந்துடன் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீரகன் செஸ் விளையாட உள்ளார். அமீர் கான் செஸ் விளையாட்டின் மீது அலாதி பிரியம் கொண்டவர். விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் அமீர் கான் விளையாட இருக்கும் ஆட்டத்தை பார்க்க இப்பவே ரசிகர்கள் செம ஆர்வமாய் இருக்கிறார்கள்.

வருகின்ற ஜூன் 13 ம் தேதி நடக்க இருக்கும் இந்த போட்டி மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடக்கும் இந்த போட்டியை chesscom india யூடுயூப் சேனலில் ஒளிபரப்ப உள்ளார்கள்.