ஒன்றிய அரசு இல்லை மத்திய அரசை இனி பாரத பேரரசு என்று அழைப்போம் – குஷ்பு.

khusbhu twwet about union government

நடிகை குஷ்பு பாஜகவில் தன்னை இணைத்து கொண்டபிறகு தீவிர பிரச்சாரத்தை பாஜகவிற்கு ஆதரவாக செய்து வந்தார். குறிப்பாக குஷ்பூ போட்டியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதியில் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டுத் தெரிந்து கொண்டார்.

குஷ்புவிற்கு பெரிய வரவேற்பை கொடுத்தார்கள் அந்தப் பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும் பொட்டு வைத்து மாலை அணிவித்து குஷ்புவை வரவேற்று குஷி படுத்தினார்கள். இதனை வீடியோவாக வெளியிட்டு பாஜகவினர் ஆயிரம் விளக்கு தொகுதியில் தங்களுக்கு இருக்கும் வரவேற்பை காட்டி வந்தனர். குறிப்பாக குஷ்பூ அவர்கள் பேசிய தாமரை மலரும் என்ற வீடியோ இணையத்தில் செம வைரல் ஆனது.

ஒருவேளை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜெயிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது என்று அனைவரையும் யோசிக்க வைத்தது பாஜக தரப்பு. சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த பின் முடிவுகள் வெளியாகின குஷ்பு அவர்கள் ஆயிரம் விளக்கு தொகுதியில் 39 ஆயிரத்து 405 ஓட்டுகள் பெற்றிருந்தார். அந்தத் தொகுதியில் எழிலன் என்ற திமுகவை சார்ந்த வேட்பாளர் 71 ஆயிரத்து 867 ஓட்டுகளை பெற்று வெற்றியும் பெற்றார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சற்று அமைதி காத்து வந்த குஷ்பு தனது கருத்துக்களை ட்விட்டர் வழியாக தெரிவித்து வந்தார் அந்த வகையில் சமீபத்தில் ஒன்றிய அரசு என்று திமுக அரசியல் தலைவர்கள் மத்திய அரசை குறிப்பிட்டு வருகிறார்கள் அதனை சுட்டிக்காட்டிய குஷ்பூ தமிழகத்தில் தற்போது தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை உள்ளது. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அவர்கள் அழைத்தால் நாம் பாரத பேரரசு என்று அழைப்போம் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

குஷ்புவின் இந்த பதிவிற்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்து பாரத பேரரசு என்று அழைத்து வருகின்றனர்.