மருத்துவர்கள் கடவுளின் தூதர்கள் நான் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள போகிறேன் – பதஞ்சலி பாபா ராம்தேவ்.

patnajali baba ramdev

பாபா ராம்தேவ் யோகப் பயிற்சிகளை கற்றுக் கொடுத்து வந்தாலும் பதஞ்சலி என்ற நிறுவனத்தை நடத்துவதில் மும்முரமாக இருந்தார். பாஜகவிற்கு ஆதரவாக இருந்தார். பாபா ராம்தேவ் அவர்களுக்கும் பாஜகவும் பெரிய அளவில் ஆதரவாக இருந்தது. நாடு முழுவதும் பதஞ்சலி பொருள் மார்க்கெட்டிங் பணி தீவிரமாக ஒரு நேரத்தில் நடந்தது. மக்களை பதஞ்சலியை வாங்க வைத்தார்கள்.

கொரோனா முதல் அறையில் கொத்துக்கொத்தாக மக்கள் பாதிப்பு அடைந்து வந்த நிலையில் ஆயுர்வேதமும் யோகாவும் தான் சரியான தீர்வு என்று கூறிவந்தார். CORONIL என்ற மருந்தை அறிமுகம் செய்தார் பாபா ராம்தேவ்.

பாபா ராம்தேவ் அவர்களின் மருந்தை மத்திய அரசு ஒப்புதல் கொடுத்து ஆய்வும் செய்துவந்தது. இவருடைய மருந்திற்கு எதிர்ப்புகள் பெரிய அளவில் மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து வந்தது.

அலோபதி மருத்துவம் ஏமாற்று வேலை என்று கூறிய பாபா ராம்தேவ் அவர்களின் கருத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் பெரிய எதிர்ப்பை தெரிவித்ததால் கருத்திலிருந்து பின்வாங்கிக் கொண்ட ராம்தேவ் பாபா தற்போது நான் விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளப் போகிறேன் மருத்துவர்கள் கடவுளின் தூதர்கள் யோகா ஆயுர்வேதம் பலத்துடன் தடுப்பூசியின் பலமும் ஒன்று சேர்ந்தால் நமக்கு இரட்டை பாதுகாப்பு என்று கூறியுள்ளார்.

அலோபதி மருத்துவர்களை அப்படி விமர்சித்த பாபாவா தற்பொழுது இப்படி புகழ்கிறார்.