அரை நிர்வாண காட்சிகளில் நடிக்கும் ஆண்ட்ரியா …!!! அமலாபாலையே மிஞ்சிடுவாரோ..!!!

andrea pisasu2 movie

ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். கௌதம் வாசுதேவன் இயக்கிய அந்தப் படத்தில் இவருக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்தது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்த ஆணட்ரியா நிறைய படங்களில் கமிட்டானார். ஆண்ட்ரியா நடிகை என்பதை தாண்டி சிறந்த பாடகி என்பதை யாராலும் மறுக்க முடியாத ஒன்று. அந்த அளவிற்கு நன்றாகப் பாடக் கூடியவர். தனது முதல் படத்திற்கு பிறகு அடுத்த படமே வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்தார் ஆண்ட்ரியா செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அதனைத் தொடர்ந்து மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்பரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, தரமணி, இது நம்ம ஆளு, அவள் , விஸ்வரூபம்-௨, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து வந்த ஆன்ட்ரியா தற்பொழுது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து பிசாசு 2 என்ற மிஷ்கின் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஆண்ட்ரியா. அந்தப் படத்தில் அரை நிர்வாணமாக சில காட்சிகள் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே அரைநிர்வாணமாக அமலாபால் நடித்து வெளிவந்த ஆடை படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆண்ட்ரியாவும் அது போல நடிக்க எப்படி ஒப்புக் கொண்டார் என்று கேள்விகள் ஒரு பக்கம் எழுந்துவர பிசாசு 2 படத்தில் கதைக்கு தேவைப்படும் காட்சி என்பதால் அதில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் அதுமட்டுமல்லாமல் தனது சம்பளத்தை இருமடங்காக கூட்டி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்திகளை உறுதிப்படுத்த உள்ளது வலைப்பேச்சு.

இந்த செய்தி வெளிவந்த உடனே ஆண்ட்ரியாவின் ரசிகர்கள் படத்தை பார்ப்பதற்காக பெரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.