வடசேரியில் தாதாவாகும் நடிகை அம்பிகா!!! வெளியான தகவல்.

Ambika

விஷ்ணுப்பிரியன் கதாநாயகனாக நடிக்கும் படம் வடசேரி. இதன் நாயகி மாளவிகா மேனன், வில்லன் வேடத்தில் வின்சென்ட் அசோகன் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஆர்எஸ் ரவிப்ரியன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு சுபாஷ், எடிட்டிங் சாபு ஜோசப், சண்டை ராம்போ விமல், நடனம் ராதிகா, கதை திரைக்கதை வசனம் இயக்கம் நக்கீரன். படம் குறித்து இயக்குனர் நக்கீரன் கூறியது: இது ஆக்ஷன் காதல் கலந்த கமர்ஷியல் படம் பிரபல தாதாவின் மகன் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை சினிமாவாக சில மாற்றங்கள் செய்து இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளேன்.

தாதாவின் மகனாக நடிக்கும் விஷ்ணு பிரியன் கேரக்டருக்காக கடும் உடற்பயிற்சியால் உடல் எடையை அதிகரித்துள்ளார். படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும் காதல் காட்சிகளும் இருக்கும் ரவுடி ஹீரோவாகும் ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்த ஹீரோயினுக்கும் காதல் மலர்கிறது. தடைகளை கடந்து காதல் ஜோடி எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி உள்ளேன். இந்த படத்தில் அம்பிகா மேடத்தின் கேரக்டர் பேசப்படும்.

நடிகை அம்பிகா ஏற்கனவே அவன் இவன் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். ஹீரோயினாக குணச்சித்திர நடிகையாக படங்களில் பிரமாதபடுத்திய அவர் இதில் பெண் தாதாவாக நடிக்கிறார் ரஜினி கமலுடன் நடித்த அவர் எந்தவித பந்தாவும் இல்லாமல் இந்த கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார் அவருடைய அந்த அப்ரோச் எனக்கு பிடித்திருக்கிறது என்று இயக்குனர் கூறியுள்ளார்.