தன் மகன் படிப்பிற்காக வைத்து இருந்த இரண்டு கன்று குட்டிகளை விற்று கொரோனா நிவாரண உதவி வழங்கிய மாற்றுதிறனாளி!!! நெகிழ்ச்சி சம்பவம் உள்ளே.

corona relief fund

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் நலனை கருதி பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அதேசமயம் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் கொரோனா பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அதைப்போல் பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி தன் மகனின் படிப்புக்காக வளர்த்த 2 கன்று குட்டிகளை விற்று கொரோனா நிவாரண நிதி வழங்கினார்.

தஞ்சை மாவட்டம் ஆழிவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி அவரது மனைவி மகேஸ்வரி இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் பிரசாந்த் 20,பிளஸ் 2 முடித்து உள்ள சஞ்சய்17 என 2 மகன்கள் உள்ளனர். ரவிச்சந்திரன் 100 நாள் வேலை செய்தும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் தன் இளைய மகனை கல்லூரியில் சேர்க்க 2 கன்று குட்டிகளை வளத்தார்.

அதை 6,000 ரூபாய்க்கு விற்று முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக தஞ்சை கலெக்டர் கோவிந்தராஜ் இடம் நேற்று வழங்கினார். நான் பிஎஸ்சி, பி.எட் படித்து தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தேன். 20 ஆண்டுகளுக்கு முன் பார்வையில் கோளாறு ஏற்பட்டது. கொரோனா நிவாரண நிதி வழங்க கையில் பணம் இல்லை மகன் படிப்பு செலவிற்கு விற்கலாம் என வைத்திருந்த இரு கன்று குட்டிகளை விற்று நிதி வழங்கினேன் என கூறி உள்ளார்.