முதல்வன் படப்பணியில் அதிரடி ஆக்ஷனில் இறங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!!! வெளியான தகவல் இதோ.

CM Stalin

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இந்தியா முழுவதும் தொற்று பாதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதத்தைக் காட்டிலும் தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. இந்த வாரம் முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் முதல்வரின் தேர்தல் பிரச்சாரத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்வில் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இத்துறையில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இடம் மக்கள் புகார் அளிக்க முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. http://cmcell.tn.gov.in/register.php என்ற முகவரியில் தங்களில புகார்களை அளிக்கலாம். அந்த புகார் சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிந்து கொள்ளும் வசதியும் செய்யபட்டுள்ளது.

தபால் மூலம் புகார்கள் அனுப்பலாம் Chief Minister’s Special cell, Secretariat,Chennai-9 மற்றும் 044-25671764 என்ற தொலைபேசி எண்ணிலும் cmcell.tn.gov.in என்ற இமெயில் முகவரியிலும் இணையதளம் மூலம் மக்கள் புகார்களை அளிக்கலாம். இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.