அதிமுக என் உயிருடன் கலந்தது விரைவில் மக்களுக்காக வருவேன் தொண்டரிடம் சொன்ன சசிகலா..!!! அதிர்ச்சியில் அதிமுக தரப்பு.

sasikala audio leak

சசிகலா அதிமுக என்ற கட்சி தமிழகத்தில் கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல நான் பெரிய பாடுபட்டு உள்ளேன் என்று கூறியுள்ளார். தற்பொழுது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியின் தொண்டர்களிடம் சசிகலா பேசி வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபகாலமாக சசிகலா அவர்கள் தொண்டர்களிடம் உரையாடிய ஆடியோக்கள் வெளியாகி அதிமுக கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமியா பன்னீர்செல்வமா என்று ஒரு பக்கம் சில பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கும் நிலையில் சசிகலா மறுபடியும் அதிமுகவை வழிநடத்த நான் வருவேன் என்று அவர் பேசி உள்ள ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவிடம் உரையாடிய தொண்டர்கள் மற்றும் கட்சியை சார்ந்தவர்கள் சிலர் நீங்கள் அதிமுக கட்சியை ஆள வேண்டும் நீங்கள் வந்தால் தான் கட்சி வலுப்பெறும் தயவுசெய்து வாங்கம்மா என்றெல்லாம் அழைத்து வருகிறார்கள்.

அக்ரஹாரா சிறையில் இருந்து வெளிவந்ததுமே அதிமுக கட்சியில் பெரிய மாற்றம் நடக்கப் போகிறது என்றெல்லாம் செய்திகள் வந்தது ஆனால் சசிகலா தன்னால் அதிமுக கட்சியில் விரிசல் ஏற்பட்டு தேர்தலில் தோல்வியை சந்தித்து விடக்கூடாது என்று எண்ணி அமைதியாக இருந்தார் தற்போது என்ன நினைத்தாரோ என்னமோ அதிமுக தொண்டர்கள் இடம் தொடர்ந்து உரையாடி வருகிறார்.

இன்று சசிகலா அவர்கள் பேசிய உரையாடல் ஒன்றில் அதிமுக கட்சிக்காக நான் பெரிதும் பாடுபட்டு உள்ளேன் அதிமுக கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் நான் அதிமுகவை வழி நடத்த வருவேன். அதிமுக என்னுடைய உயிரில் கலந்தது என்று தெரிவித்த அவர் விரைவில் நான் தொண்டர்களுக்காக வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

சசிகலா அவர்கள் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.