என்னையும் என் குடும்பத்தையும் தொலைத்துவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள் சசிகலா தரப்பு..!!! 500க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல்கள் வருகிறது.போலீசாரிடம் புகார் அளித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்.

sasikala-shanmugam

விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகம் நேற்று விழுப்புரம் மாவட்டம் ரோஷனை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வள்ளியிடம் அளித்த புகார். விழுப்புரம், 7 தேதி கட்சி அலுவலகத்தில் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களுடன் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் கருவாடு கூட மீன் ஆகலாம் ஆனால் சசிகலா அதிமுகவில் எப்போதும் உறுப்பினராக முடியாது. அதனால் சசிகலா அதிமுகவில் எப்போதும் உறுப்பினராக முடியாது. சசிகலாவுக்கும் அதிமுக கட்சிக்கும் எந்தத் சம்பந்தமும் இல்லை. அதிமுக கட்சியை சீர்குலைக் வே தேர்தல் இணையத்திலும் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கு கொடுத்து தள்ளுபடியானது.

எனவே சசிகலா முன்னாள் முதல்வர் எங்கள் அம்மா ஜெயலலிதாவின் உதவியாளராக அவரோடு இருந்தார் அதைத் தவிர அவருக்கு வேறு எந்த தகுதியும் இல்லை என அரசியல் ரீதியாக சசிகலா குறித்து ஊடகங்களில் சில கருத்துக்களை தெரிவித்தார். அதற்கு சசிகலா நேரடியாக பதில் அளிக்காமல் தான் அடியாட்களை வைத்து மொபைல் போன் மூலம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார். மேலும் சமூக ஊடகங்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர்களிலும் அநாகரிகமாக பதிவிட்டு வருகிறார். நேற்று வரை 500 மொபைல் போன் அழைப்புகள் வந்துள்ளன இன்னமும் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

சசிகலா பற்றி பேசினால் உன்னையும் உன் குடும்பத்தையும் தொலைத்து விடுவோம் என மிரட்டும் வகையில் பேசுகின்றனர். இதற்கு சசிகலாவின் தூண்டுதலே காரணம் சசிகலா மீதும் என் மொபைல் போனில் வந்த அழைப்புகளில் பேசிய மர்ம நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.மொபைல் போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர்கள் மீதும் அதற்கு தூண்டுதலாக இருக்கும் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சண்முகம் போலீசில் புகார் அளித்துள்ளார்.