திமுக வேஷ்டி கட்டிக்கொண்டு தனது மகனுடன் முதல்வரை சந்தித்த லியோனி..!!! திமுகவில் தொடர்ந்து உழைப்பேன் சபதம்.

leoni meet mkstalin

பட்டிமன்ற பேச்சாளர் லியோனி இவருடைய பேச்சை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது அந்த அளவிற்கு நகைச்சுவையாக பட்டிமன்றங்கள் சுவாரஸ்யத்தோடு கொண்டு செல்வார்.

இவருடைய அன்பினாலும் அரவணைப்பிலும் இன்று பல பட்டிமன்ற பேச்சாளர்களை உருவாக்கியவர். கலைஞர் மீதும் திமுக கட்சியின் மீதும் அன்பு கொண்டவர்.

சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் தீவிர பிரச்சாரம் செய்த லியோனி ஸ்டாலின் அவர்கள் தான் முதல்வராக பொறுப்பேற்பார் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே கூறி வந்தார்.

ஸ்டாலின் அவர்கள் முதல்வராக அமர்ந்த பின் திமுக கட்சி வேஷ்டியை கட்டுவேன் என்றும் சபதம் எடுத்து இருந்தார். அவள் சொன்னது போல ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் தற்பொழுது முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து உள்ளார் லியோனி.

திமுக கட்சி வேஷ்டி கட்டிக்கொண்டு தனது மகனுடன் ஸ்டாலின் அவர்களை அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற லியோனி பல ஆண்டுகள் இலக்குடன் உழைத்த பலனை அடைந்ததில் மகிழ்ச்சி சூரியனைப்போல் உழைக்கும் தலைவரின் பணிகள் தொடர தொடர்ந்து உழைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் ஹீரோவாக நடித்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.