கொரோனா தொற்றிலிருந்து போராடி மீண்டு வந்து 10 நாட்களுக்கு பிறகு தனது முதல் குழந்தையை கையில் வைத்து கொஞ்சிய மருத்துவர்..!!! நெகிழ்ச்சி சம்பவம்.

doctor arfa first child

நாடெங்கும் கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும் கொரோனாவால் இன்றும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரோனாவின் தாக்கம் குறைந்து இருந்தாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து தெரிவித்து வருகிறார்கள். தினந்தோரம் தனக்கு நெருக்கமானவர்களை இழந்து தவிக்கிறார்கள் மக்கள்.

இந்நிலையில் மேற்கு வங்கம் ஹவுராவை சேர்ந்த 25 வயதான இளம் மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனது குழந்தையை கூட காண முடியாமல் பத்து நாட்களுக்குப் பிறகு தன் முதல் குழந்தையை கையில் எடுத்து கொஞ்சிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் ஆர்பா இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை கொடுத்து வந்தனர் மருத்துவர்கள். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருடைய குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வந்தனர் கடைசியில் சிசேரியன் செய்து அந்த குழந்தையை உயிருடன் வெளியில் எடுத்தனர்.

பிறந்த குழந்தையை டெஸ்ட் செய்து கொரோனா டெஸ்ட் செய்தார்கள் மருத்துவர்கள் அந்த டெஸ்ட்டிலில் நெகடிவ் வந்தவுடன் தாயிடமிருந்து குழந்தை பத்திரமாக பத்துநாள் பாதுகாக்கப்பட்டது.

தாயிடம் குழந்தை இருந்தால் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக நினைத்த மருத்துவர்கள் தாயை விட்டுப் பிரிந்து மருத்துவர்கள் தனியாக பாதுகாத்து வந்தனர்.

அதன் பின் 10 நாட்களுக்கு பிறகு கொரோனாவில் இருந்து மீண்ட மருத்துவர் ஆர்பா முதன்முதலாக தனது குழந்தையை கையில் எடுத்து கொஞ்சிய காட்சி காண்போரை நெகிழ செய்து உள்ளது.