நான் சீதையாக நடித்ததற்கு பெரிய எதிர்ப்பு வந்தது..!!! நான் ஏன் நடிக்கக்கூடாது நானும் நடிகை தானே – நயன்தாரா.

nayanthara sri rama rajyam

நயன்தாரா கேரளத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக முதலில் வேலை பார்த்து வந்தவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

முதல் படத்திலேயே யார் இந்த புது கேரள வரவு என்று அனைவரையும் உற்று நோக்க வைத்த நயன்தாரா அதனைத் தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் நடித்து வந்தார். ஏகப்பட்ட தமிழ் பட வாய்ப்புக்கள் நயன்தாராவிற்கு குவிய கொடிகட்டி பறந்து வந்த நயன்தாரா சிம்புவுடன் காதல், பிரபுதேவாவுடன் காதல் என்று தொடர் காதல் தோல்விகளால் நொந்துபோய் சிலகாலம் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

அதன் பின் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த நயன்தாராவிற்கு தெலுங்கு சினிமாவில் ஸ்ரீ ராம ஜெயம் என்ற படத்தில் சீதையாக நடித்து இருந்தார்.

நயன்தாரா சீதையாக எப்படி நடிக்கலாம் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு வந்தது. அந்த நேரத்தில் நயன்தாராவிற்கு பெரிய சப்போர்ட்டாக இருந்தது அந்த படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ தானாம்.

நயன்தாரா சீதையாக நடித்த போது முறையாக விரதம் எடுத்து அசைவ உணவுகளை தவிர்த்து தொலைக்காட்சி கூட பார்க்காமல் எந்த ஒரு படங்களும் பார்க்காமல் கட்டுப்பாட்டுடன் இருந்தாராம்.

அசைவம் உணவகத்தில் தயாரிக்கும் உணவினை கூட சாப்பிட தவிர்த்து வந்தாராம். அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் கடைசி நாளில் படக்குழுவினர் கொடுத்த வரவேற்பில் கண் கலங்கி நின்றார் நயன்தாரா அதன்பின் அந்த படத்தில் பணிபுரிந்த சீனியர் ஆர்டிஸ்ட் சிலரிடம் ஆசீர்வாதம் பெற்றார் நயன்.

இதுகுறித்து நயன்தாரா ஒரு பேட்டியில் நான் சீதையாக நடித்ததற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது எப்படி இவர் சீதையாக நடிக்கலாம் என்றெல்லாம் கேட்டார்கள் நானும் ஒரு நடிகை தானே. ஒரு நடிகைக்கு எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை நடித்துக் காட்ட வேண்டியது கடமை. அப்படிப் பார்த்தால் அம்மனாக வேடமிட்ட பல நடிகைகள் அம்மனாக நடித்திருக்க முடியாது.

முறையாக விரதம் எடுத்து கஷ்டப்பட்டு இந்த படத்தில் நடித்தேன் ஆனால் இந்த படத்தில் நடிக்க கூடாது என்று கூறியது மிகவும் கஷ்டமாக இருந்தது ஆனால் படம் வெளியாகி நல்ல வரவேற்புடன் பெற்று நிறைய விருதுகளையும் பெற்றுத்தந்தது அதன் பின் தான் என்னுடைய கஷ்டம் எல்லாம் மறைந்தது என்று கூறியுள்ளார் நயன்தாரா.