மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி..!!!

narendra modi edapadddi palaniswami

சமீபத்தில் பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களிடம் உரையாடினார் அப்பொழுது ஒன்றிய அரசு தடுப்பூசிகளை பிற நாடுகளிலிருந்து வாங்கி அந்தந்த மாநிலங்களுக்கு இலவசமாக கொடுக்கும் என்று தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி அறிவிப்புக்கு பல தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் வந்தது ஆனால் சிலர் மோடி சொன்னபடி செய்தால சரி அவர் சொல்லுவதை செய்வதில்லை என்று புகார்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக கட்சியின் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா துயர்துடைக்க நாட்டில் உள்ள 75% மக்களுக்கு உயிர் காக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்கியதற்கும், நவம்பர் மாதம் வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளமைக்கும் கோவின் செயலியில் தமிழ் மொழியை பயன்பாட்டு மொழியாக்கம் செய்த மைக்கும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

பிரதமர் மோடி சொன்னது போல வருகின்ற ஜூன் 21 ம் தேதி தடுப்பூசிகள் தட்டுப்பாடு இல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்தால் நல்லது தான்.