கர்லிங் ஹேர் கொட்டி ராஜேந்திரன் மொட்டை ராஜேந்திரன் ஆகியது இப்படி தானாம்..!!! அவரே கூறிய தகவல்.

motta rajendran openup about hair fall

மொட்டை ராஜேந்திரன் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் பல வருடங்களுக்கு முன் தலை முடியுடன் தான் இருந்துள்ளார் அவருடைய தலை முடி கொட்டியதன் காரணம் தற்போது அவரே வெளியிட்டுள்ளார்.

மொட்டை ராஜேந்திரன் தமிழ் சினிமாவில் அமரன் என்ற படத்தில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த ராஜேந்திரன் நான் கடவுள் என்ற படத்தில் மூலம் சினிமாவில் பெரிய பிரபலமானார் அதனைத் தொடர்ந்து ராஜேந்திரன் பாஸ் என்கிற பாஸ்கரன், பானா காத்தாடி, வேலாயுதம், சிங்கம் 2 வேதாளம், விஸ்வாஸம், தெறி, டார்லிங், மெர்சல், இவனுக்கு தண்ணில கண்டம், பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மொட்டை ராஜேந்திரன் அவர்களின் புகைப்படத்தை போஸ்டரில் போட்டு பிரபலம் தேடிக் கொண்ட சில படங்களும் உண்டு.

முதலில் நூற்றுக்கும் மேற்பட்ட சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக பணிபுரிந்த ராஜேந்திரன் தமிழ் சினிமாவில் தற்போது நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

ராஜேந்திரன் எப்படி மொட்டை ராஜேந்தர் ஆனார் என்பதை பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியது முதலில் அவர் கர்லிங் ஹேர் வைத்திருந்தாராம் சீப்பை வைத்து தலையை வாரிக் கொண்டே இருப்பாராம் அந்த அளவுக்கு அவருக்கு முடி இருந்ததாம். ஸ்டண்ட் கலைஞராக அவர் இருந்தபோது வயநாட்டில் ஒரு சூட்டிங் நடந்ததாம் அப்பொழுது ஒரு 10 அடி உயரத்திலிருந்து ஆர்டிஸ்ட் ஒருவரை அடித்துவிட்டு தண்ணிக்குள் குதிக்க வேண்டிய காட்சியாம் உடனே ராஜேந்திரன் ஆர்ட்டிஸ்டை அடித்துவிட்டு தண்ணிக்குள் குதித்திருக்கிறார்.

அந்த நேரத்தில் சுற்றி இருந்த மக்கள் ஏன் அந்தத் தண்ணீரில் குதித்தீர்கள் அது அருகில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவு நீர் என்று கூறினார்களாம். அதன்பின் வீட்டுக்கு வந்துள்ளார் முதலில் சின்னதாக பொடுகு போல தலையில் வந்ததாம் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக தலையில் உள்ள முடி எல்லாம் கொட்டி போனதாம்.

இப்படிதான் ராஜேந்திரன் மொட்டை ராஜேந்திரன் ஆகியுள்ளார். மனிதன் 63 வயது ஆனாலும் தனது ஃபிட்னஸ் மெயின்டெய்ன் பண்ணுவதை தவறுவதில்லை. இந்த வயதிலும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் ராஜேந்திரன் .