சூர்யாவின் அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் குஷியான ரசிகர்கள்..!!!

suriya40 updates

இயக்குனர் பாண்டியராஜ் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த நல்ல இயக்குனர் அவருடைய படங்களில் நல்ல கதை இருக்கும் என்பதினால் பாண்டியராஜ் திரைப்படம் வந்தால் மக்கள் விரும்பி பார்ப்பார்கள்.

தமிழ் சினிமாவில் பசங்க என்ற படத்தின் மூலம் இயக்குனரான இவர் முதல் படத்திலேயே மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார். சிறிய குழந்தைகளை தனது படங்களில் நடிக்க வைத்து அவர்கள் நடிப்பிற்கு பலரது பாராட்டுகளை வாங்கிக் கொடுத்தவர். அதனைத் தொடர்ந்து வம்சம் என்ற படத்தை எடுத்த இவர் . மெரினா என்ற படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை முதல் முதலாக தமிழ் சினிமாவிற்கு
அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு தான் சேரும்.

இயக்குனர் பாண்டிராஜ் பொருத்தவரை அவர் எடுக்கும் கதைகள் குடும்பத்தை சுற்றி நடப்பதால் அனைவரும் இவரின் படத்தை விரும்பி பார்க்க தியேட்டருக்கு வருகிறார்கள். குறிப்பாக இவர் எடுத்த கடைக்குட்டி சிங்கம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

நடிகர் கார்த்திக்கு பெரிய வெற்றியை நீண்ட நாட்களுக்கு பிறகு பெற்றுத் தந்தது. சன் பிக்சர்ஸ் பாண்டியராஜன் அவர்களிடம் கடைக்குட்டி சிங்கம் போன்று ஒரு படத்தை சிவகார்த்திகேயனை வைத்து எடுத்துக் கொடுங்கள் என்று கேட்டதற்கு அவர் எடுத்துக் கொடுத்த படம் தான் நம்ம வீட்டு பிள்ளை. அந்தப் படமும் கடைக்குட்டி சிங்கம் போன்று மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்பொழுது சூர்யாவுடன் கைகோர்த்து இருக்கும் பாண்டியராஜ் அவர்கள் சூர்யாவின் 40வது படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். நேற்று பாண்டியராஜ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் அனைவரும் சூர்யாவின் படத்தை பற்றி கேட்க அதற்கு பதிலளித்த பாண்டியராஜ் 35% படம் முடிஞ்சு இருக்கு எடுத்த வரைக்கும் நல்லா வந்திருக்கு அடுத்து லாக்டோன் முடிஞ்சதும் ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான். எங்க டீம் ரெடி டைட்டில் மாஸ்ஸா வரும் ஜூலை வரைக்கும் டைம் கொடுங்க ப்ளீஸ் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார் பாண்டியராஜ்.

ஏற்கனவே சூர்யாவும் பாண்டியராஜன் இணைந்த பசங்க 2 மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று நல்ல தரமான படம் என்ற பெயர் பெற்றது தற்போது உருவாகி வரும் சூர்யாவின் 40வது படம் வேறொரு கதைக்களம் என்றாலும் பாண்டியராஜன் குடும்ப செண்டிமெண்ட் மற்றும் மாஸ் காட்சிகள் இதில் இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.