முன்னணி நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம்!!! மாப்பிளை யாருனு தெரியுமா.

Anjali

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை அஞ்சலி. நடிகை அஞ்சலி ராம் இயக்கத்தில் வெளியான “கற்றது தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தனது முதல் படத்திலேயே அபாரமாக நடித்ததால் சிறந்த அறிமுக நாயகி என பிலிம்பேர் அவார்ட் பெற்றார். அதைத்தொடர்ந்து அங்காடி தெரு, எங்கேயும் காதல், கலகலப்பு, சேட்டை போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தனக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் பவன் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை அஞ்சலி குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். சமீபத்தில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களே திக்குமுக்காட செய்துள்ளார். அதேபோல் நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வெளியாயின. ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு பிரிந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

நடிகை அஞ்சலி தமிழில் பூச்சாண்டி திரைப்படம், தெலுங்கில் இரண்டு திரைப்படங்களும், கன்னடம் மொழியில் ஒரு திரைப்படமும் கைவசம் வைத்துள்ளார். தற்போது நடிகை அஞ்சலி விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் திருமண ஏற்பாடுகள் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகிறது. ஆனால் அஞ்சலி தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை வெளியிடப்படவில்லை.