தினமும் உணவு வழங்கி வரும் பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா!!! இப்படியும் ஒரு நடிகையா..

Dharsha gupta

உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் இன்று முதல் தளர்வுகள் உடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. பல்வேறு தரப்பினரும் முழு ஊரடங்கு காலகட்டத்தில் அன்றாட வாழ்விற்கு தவித்து வந்தனர். சாலையோரம் வசிப்பவர்களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் பலர் உணவுகள் கொடுத்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற தர்ஷா குப்தா. மேலும் விஜய் டிவியில் செந்தூரப்பூவே என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது தர்ஷா குப்தா நாள்தோறும் உணவின்றி வாடும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பகுதிக்கு சென்று ஆதரவற்றவர்களுக்கு சத்தான உணவு வழங்கி வருகிறார்.

இந்நிலையில் முன்கள பணியாளர்களுக்கு மற்றும் காவல்துறையினருக்கு வெயிலில் வாடி வருவதால் ஜூஸ் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கி வருகிறார். அதேபோல் மீனவ மக்களை நேரில் சந்தித்து உணவு மற்றும் தேவையான பொருட்களை வழங்கியுள்ளார். இந்த கொரோனா காலகட்டத்தில் எந்த வித அச்சமும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி விடாமல் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் நாள்தோறும் தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார்.

தர்ஷா குப்தா தினமும் வெளியில் சென்று வருவதால் குடும்பத்தினருக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என எண்ணி தனியாக வீடு ஒன்று எடுத்து தங்கி மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அனைவரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். எதோ அந்த புகைப்படங்கள்.