சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது!!! ஆள் அடையலாமே தெரியாம மாறிட்டாங்களே.

shriya Sharma

கடந்த 2006ஆம் ஆண்டு கே.இ.கனகவேல் ராஜா தயாரிப்பில் என். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஷ்ரேயா ஷர்மா. இந்த திரைப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு மகளாக ஐசு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

மேலும் அதைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதேபோல் பல்வேறு முக்கிய விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரேயா சர்மா கல்லூரி படிப்பை முடித்து வக்கீலாக புதிய அவதாரம் எடுத்துள்ளார். அதேபோல் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். நடிகை ஸ்ரேயா சர்மா யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அழகு சார்ந்த குறிப்புகளை பதிவிட்டு வந்தார்.

மேலும் தமிழ் சினிமாவில் எப்போது நடிக்க வருகிறீர்கள் என்று ரசிகர்கள் கேட்டதற்கு சிறிய புன்னகையுடன் பதில் அளித்தார். தற்போது சமூக வலைத்தளங்களில் ஸ்ரேயா சர்மா உடல் எடை கூடி உள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.