5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சீரியல் நடிகருக்கு சப்போர்ட் செய்யும் யாஷிகா ஆனந்த்!!! விபரம் உள்ளே.

Yasika anand

ஹிந்தி சீரியலில் Dil Ki Nazar Se Khoobsurat என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் பிரபல நடிகர் பியர்ல் வி பூரி. அவர் தமிழில் நாகினி 3 சீரியல் மூலம் அறிமுகமான. இவர் இந்தியில் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் சிறுமி ஒருவருக்கு சினிமா மற்றும் சீரியலில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என மும்பை அரசு அதிரடியாக கைது செய்து உள்ளது.

மும்பையில் உள்ள கிழக்கு பகுதியில் உள்ள வாலிவ் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ஏற்கனவே விக்ரம் நடிப்பில் வெளியான சாமுராய் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அனிதா ஹாசனந்தனி.அவர் பியர்ல் வி பூரி உடன் இணைந்து நாகினி3 தொடரில் நடித்த பாலிவுட் நடிகை அனிதா ஹாசனந்தனி பியர்ல் வி பூரி ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அந்த நடிகர் அப்படிப்பட்ட ஆள் இல்லை அவர் பெயர் கலங்கடிக்கும் வகையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த் பியர்ல் வி பூரிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இந்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் ட்விட்டர் பக்கத்தில் அந்த நடிகருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் #ISTANDWITHPEARL ஹாஸ்டாக் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.