தமிழகத்தில் இன்று 34,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!!

corona tamilnadu

கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கினை அறிவித்தது. தற்பொழுது முழு ஊரடங்குக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள் மக்கள்.

இதுபோல மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா பரவல் தொற்று அதிகம் பரவாமல் அனைவரும் தற்காத்துக் கொள்ளலாம்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது அதில் தமிழகத்தில் மட்டும் இன்று 34780 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் இன்று 468 பேர் மரணமடைந்துள்ளனர்.

28,745 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது வரை 3,06,652 சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மட்டும் தமிழ்நாட்டில் கொரோனாவால் 21,340 பேர் உயிர் இழந்து உள்ளனர்.