செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அவசர தேவை..!!! 27ம் தேதி நேர்காணல் 28 ம் தேதி பணியில் சேர அறிவிப்பு..!!! விருப்பம் உள்ளவர்கள் உடனே பதிவு செய்யுங்கள்- சென்னை மாநகராட்சி.

staff nurse vaccancies

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவித்துள்ளது இந்நிலையில் மருத்துவர்களும் செவிலியர்களும் அயராமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சென்னையில் மருத்துவர்கள் செவிலியர்கள் அனைவரும் ஓய்வில்லாமல் தங்களது பணியினை செய்து வருகிறார்கள்.

சென்னை மாநகராட்சியில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மேலும் தேவைப்படுவதால் வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி.

கொரோனா நோய் தடுப்பு பணியில் மருத்துவ அலுவலராக பணி புரிய விருப்பம் உள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் நேரடியாக கல்வித் தகுதிக்கான அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி.

சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதில் விருப்பமுள்ள கல்வித் தகுதி உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை 26 -5 – 2021 இரவு 8 மணிக்குள் கீழ்க்கண்ட இணையத்தளத்தில் பதிவு செய்ய அறிவித்துள்ளார்கள்.

Medical Officer : http://covid19.chennaicorporation.gov.in/covid/medicalofficer/

Nurse : http://covid19.chennaicorporation.gov.in/covid/nurse/

இந்த வேலைவாய்ப்பை பற்றி கூடுதல் தகவல் பெற வாட்ஸ்அப் நம்பர் மற்றும் மின்னஞ்சல் ஒன்றையும் அறிவித்துள்ளார்கள்.

MEDICAL OFFICER POST WHATSAPP NUMBER: 9498346492

NURSE POST WHATSAPP NUMBER: 9498346493

EMAIL : [email protected]

மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கான நேர்காணல் வருகின்ற 27 -5- 2021 ஆம் தேதி நடைபெற இருக்கிறது இந்த நேர்காணல் 10:00 மணி அளவில் ஆரம்பித்து மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த நேர்காணல் நடைபெறும் இடம் பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா மாளிகை கூட்ட அரங்கம்.

இந்த நேர்காணலில் கலந்து கொள்பவர்களுக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருக்கிறது அதில் இந்தப் பதவியானது முற்றிலும் தற்காலிகமானது எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்ய மாட்டாது என்பதை தெளிவாக கூறியிருக்கிறார்கள். பணியில் சேர்வதற்கு சுயவிருப்பம் ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்கள். தேர்வு செய்யப்பட்டவர்கள் 28-5 2021 அன்று பணியில் சேர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.