மகனுக்கு பதவி கொடுக்காத ஸ்டாலின்..!!! அமைச்சரவை பட்டியலில் பெயர் இல்லாததற்கு காரணம் இதுவாக இருக்குமோ?

udhayanidhi stalin name not in tamilnadu cabinet list

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக 159 கூட்டணியில் பெரிய வெற்றியை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் 124 இடங்களில் தனது மெஜாரிட்டியை காட்டிய திமுக தற்போது ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து நாளை தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழக அமைச்சரவை பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பட்டியலில் நன்கு செயல்படக்கூடிய மூத்த அமைச்சர்கள் மற்றும் புதிதாக வந்திருக்கும் அமைச்சர்கள் அனைவருக்கும் பொறுப்புகள் நியமிக்கப்பட்டிருந்தது.

திமுகவினர் மற்றும் மக்கள் மத்தியில் ஒரு பெரிய அதிர்ச்சி என்னவென்றால் அந்தப் பட்டியலில் ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த ஒரு பதவியும் கொடுக்கப்படவில்லை. அந்தப் பட்டியலில் உதயநிதிஸ்டாலின் பெயர் இல்லாதது திமுகவினருக்கு பெரிய ஷாக் ஆக இருந்தது.

இந்த தேர்தலில் கட்சிக்காக களமிறங்கி தீவிர பிரச்சாரம் செய்தது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றவர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு எதாவது பதவி கொடுத்து இருக்கலாமே என்று முணுமுணுத்து வருகிறார்கள் திமுக தொண்டர்கள் தரப்பு.

உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது சினிமா துறையிலும் இருக்கிறார் கண்ணை நம்பாதே, ஆர்டிகல் 15 போன்ற படங்களில் நடித்து வரும் உதயநிதிக்கு ஒருவேளை பதவி வழங்கப்பட்டால் மக்களிடம் ஏதாவது அவப்பெயர் ஏற்படும் என்று நினைத்தார்களா அல்லது தனது மகன் உதயநிதிக்கு உடனே பதவியைக் கொடுத்தால் வாரிசு அரசியல் என்று பேச ஆரம்பித்து விடுவார்கள் என்று யோசிக்கிறார்களா என்று புரியவில்லை என்று புலம்பி வருகிறார்கள் உதயநிதி ஸ்டாலின் மீது அன்பு கொண்டவர்கள்.

ஒரு சில திமுகவினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார்கள்.