mgr sivaji dance vaathi coming song

கொரோனாவிற்கு பிறகு மக்கள் தியேட்டருக்கு வருவார்களா என்று கேள்விக்குறியாக இருந்த நேரத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. மாஸ்டர் படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு படை எடுத்தனர்.

விஜய் படம் என்றாலே கூட்டம் அள்ளும் அதில் லோகேஷ் கனகராஜ் எடுத்த கைதி படம் ஏற்கனவே பெரிய ஹிட் என்பதினால் பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு இருந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் விஜயுடன் விஜய் சேதுபதியும் நடிப்பதால் எதிர்பார்ப்பு இரட்டிப்பானது.

மாஸ்டர் வந்த பின்தான் பல திரையரங்க உரிமையாளர்கள் முகத்தில் சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. அந்த அளவிற்கு மக்கள் தியேட்டருக்கு வந்து திரை அரங்கத்தை நிரம்பச் செய்தனர்.

மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் என்ற பாடல் மாபெரும் பிரபலம் அடைந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. அந்தப் பாடல் வெளியான நேரத்தில் இருந்து இன்று வரை பிரபலமான பாடல் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

சமூக ஊடகங்களில் ஏதாவது காட்சிகளை எடிட் செய்து தங்களது எடிட்டிங் திறமையை காட்டி வருவார்கள் இணையவாசிகள். இணையவாசிகளின் எடிட் பண்ண பல வீடியோக்கள் நம்மை சிரிக்க வைத்து வைரலாகியுள்ளது அந்த வரிசையில் தற்பொழுது வாத்தி கம்மிங் பாடலுக்கு எம்ஜிஆர் அவர்களும் சிவாஜி அவர்களும் போட்டி போட்டு ஆடி இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து எடிட் செய்துள்ளனர்.

அந்த வீடியோவை பார்த்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்து அதனை தற்போது இணையத்தில் இந்த வீடியோவை பிரபலங்கள் ஷேர் செய்து வருகின்றனர்.