kaavya arivumani going to act with vanibhojan

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விஜய் டிவியில் பிரபலமான தொடர்களில் இந்த தொடரும் ஒன்று. பிஸியான நேரத்தில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடருக்கு நேரம் ஒதுக்கி சில சீரியல்களை இன்றும் பார்த்துதான் வருகிறார்கள். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் குடும்ப ஒற்றுமையை முன்னிறுத்தி எடுத்துச் சொல்லும் கதை என்பதால் மக்கள் இந்த சீரியலுக்கு பெரிய வரவேற்பை கொடுத்து வந்தனர்.

குறிப்பாக இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சித்ராவிற்கு ஒரே சீரியலில் பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

சில மாதங்களுக்கு முன்பு விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அதன் பின் இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்று ரசிகர்களிடம் பெரிய ஆவல் இருந்தது. முல்லை கதாபாத்திரத்தில் முதலில் நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா நடிப்பதாக செய்திகள் வெளியானது அதன்பின் அவரே அது எல்லாம் சுத்தப் பொய் நான் அந்த சீரியலில் முல்லையாக நடக்கவில்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

அதன்பின் காவ்யா அறிவுமணி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இனி முல்லையாக நடிப்பார் என்று விஜய் டிவியே அறிவித்தது. அதன்பின் காவ்யா மறைந்த சித்ராவின் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.

ஆரம்பத்தில் சித்ரா இருந்த இடத்தில் காவ்யாவை மக்கள் ஏற்க மறுத்தாலும் அதன் பின் இவரும் நன்றாக தானே நடிக்கிறார் என்று மக்கள் காவ்யாவை முல்லை ஆக ஏற்றுக் கொண்டனர்.

VJ சித்ராவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் பெரிய பிரபலத்தை கொடுத்தது போல காவ்யாவிற்கு பெரிய வாய்ப்பு ஒன்றினை அளித்துள்ளது. காவ்யா விரைவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்ல இருக்கிறார். வெளித்திரகிக்கு சென்றாலும் சின்னத்திரையில் நடிப்பதை தொடருவாராம்.

பரத் வாணி போஜன் நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் சக்திவேல் என்பவர் இயக்குகிறார். இந்த படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் உருவாக இருக்கிறதாம் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை காவ்யா நடிக்க உள்ளாராம். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு போகும் மற்றொரு நாயகி காவ்யாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

சித்ரா தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி கொண்டு தொகுப்பாளராக பணி புரிந்து முல்லை கதாபாத்திரம் மூலம் பிரபலம் அடைந்து கால்ஸ் என்ற படத்தில் வெள்ளித்திரைக்கு அறிமுகம் ஆகி கடைசியில் வெள்ளித்திரையில் சாதிக்க முடியாமல் போய்ட்டாங்க . நீங்க அவங்க அடைய நினைத்த உயரத்தை அடையுங்கள் காவ்யா என்று கூறி உருக்கமாக வாழ்த்து சொல்லி வருகிறார்கள் சித்ராவின் ரசிகர்கள்.